Wednesday, March 3, 2010

இசையில் தொடங்குதம்மா

திரு. இளையராஜா அவர்களை துறவி சன்னியாசி எனப் பலர் கூறுவதுண்டு. விரக தாபத்திற்கு அவர் எழுதிய வரிகளும் அமைத்த இசையும் அப்பப்பா.... கேட்டுப்பாருங்கள் இந்தப் பாடலை. நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் வேறென்ன வேண்டும் சொல்ல?

படம்: ஹேராம். பாடியவர்:பண்டிட் அபய் சக்ரவர்த்தி.



இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டால்
இங்கு நமக்கு

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா
தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டுவா

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தைத்
தேடி தேடி தேகத்தீ வளர்ந்ததே

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

No comments:

Post a Comment