Wednesday, March 3, 2010

நான்தானா இது நான்தானா

தற்செயலாய் தான் கேட்க நேரிட்டது இந்தப் பாடலை. ‘நினைத்தாலே’ என்னும் திரைப்படத்தில் திரு. விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவான பாடல். திரும்ப திரும்ப கேட்கத் தூண்டிய பாடல். திரு.ராகுல் நம்பியாரும் திருமதி.சாதனா சர்கமும் கனிவாக பாடியிருக்கின்றனர். சாதனா சர்கம் குரல் மனதை வருடுகிறது. ‘பொன்’ என்பதற்கு ‘புண்’ என உச்சரிப்பதும் ’நூதனம்’ என்பதற்கு ‘நோதனம்’ என உச்சரிப்பதும் பாடலைத் தமிழ்ப்படுத்த எடுத்த முயற்சிகளில் ஏற்பட்ட வழுக்கல்கள். எல்லாப் புகழும் அந்த சொல்லமைப்பாளருக்கே போய்ச் சேரட்டும். பாடல் அருமை!

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

என் நினைவினில் மோதி எதிரொலித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபலித்தாயே
பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே

என்மேல் உந்தன் காதல் கொடுத்தாய்
புன்னகையால் என்னை இழுத்தாய்
ஊசிமுனை மீது ஒரு தவமிருந்தாய்
என்னுடைய ரோஜா செடியில்
உன்னுடைய வியர்வைத் துளிகள்
முட்கள் என்னைக் குத்துமென்று நீக்கிவிட்டாய்
என்னுடல் பாவனை உன்னதம் என்றாய்
என் குரல் ஓசை ஓர் சுவரம் என்றாய்
என்னுடன் வாழ்வது தீஞ்சுவை என்றாய் தேன் என்றாய்
பூவிழி பார்வைகள் நுண்ணியதென்றாய்
வாயிதழ் வார்த்தைகள் நூதனம் என்றாய்
நான் உனைச் சேர்ந்திடும் சீதனம் என்றாய் பொன் என்றாய்

பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

நீயும் எனைப் பாராதிருந்தால் நானும் உனைச் சேராதிருந்தால்
காதல் சுகம் காணாமலே இருந்திருப்பேன்
சந்தர்ப்பமோ நேராதிருந்தால் சம்மதமே கூறாதிருந்தால்
சாகும் வரை நோகும் தவம் புரிந்திருப்பேன்
உன்னுடல் வெய்யிலில் வியர்ப்பதைக் கூட
உன் நிழல் பூமியில் விழுவதைக் கூட
என் மனம் நிச்சயம் தாங்குவதில்லை வலிமையில்லை
பூவினைக் காட்டிலும் காதலன் மென்மை
ஏனதைப் போலென்னை மாற்றியது பெண்மை
காதலன் தேர்வுகள் தேடுது உன்னை அது இனிமை

பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

என் நினைவினில் மோதி எதிரொலித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபலித்தாயே
பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

No comments:

Post a Comment